1. தோணி

                                                                        1. தோணி

 

காவிரியில் வெள்ளம்.  நான் திருச்சியில் இருக்கிறேன்.  அக்கரைக்குப் போக வேண்டும்.

பஸ் கிடையாது.  ரயில் கிடையாது.  ஆற்றங்கரையில் ஒரு தோணி இருக்கிறது. 

 

நான் தோணிக்காரனிடம்  “என்னை அக்கரைக்குக் கொண்டு போ.  உனக்குப் பத்து ரூபாய் கொடுக்கிறேன்” என்று சொல்கிறேன். 

அவன் “சரி” என்று சொல்கிறான்.

 

இப்போது தோணி ஆற்றின் நடுவில் இருக்கிறது.  நானும் தோணிக்காரனும்

தோணியில் இருக்கிறோம். 

 

நான் அவனிடம் “தம்பி!  உனக்குச் சின்ன வயது.   படிக்கத் தெரியுமா?” என்று கேட்கிறேன்.

 

“இல்லை.” என்கிறான் அவன்.

 

‘’அடடா!  உன் வாழ்க்கையில் பாதி வீண்!” என்கிறேன் நான்.

 

“சாமி! உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று அவன் திருப்பிக் கேட்கிறான்.

 

“தெரியாது”.

 

“அடடா! உங்கள் வாழ்க்கை முழுவதும் வீண்.  தோணியில் ஓட்டை இருக்கிறது.

எனக்கு படிப்பு இல்லை. ஆனால் நீச்சல் தெரியும்.”

 

யார் பாவம்?

 

Glosaary

 

தோணி                                rowing boat (படகு)

காவிரி                                name of a river in Tamil Nadu

வெள்ளம்                            flood

திருச்சி                               a town on the southern bank of காவிரி 

அக்கரை                             other side (of river)

கிடையாது                         no (இல்லை)

ஆற்றங்கரை                    river bank

கொண்டுபோ(போக, போய்) take

ஆறு                                      river

நடுவில்                                in the middle (மத்தியில்)

வயது                                    age

வாழ்க்கை                          life (வாழ் ‘live’ (வாழ, வாழ்ந்து))

பாதி                                       half

வீண்                                      waste

நீந்து (நீந்த, நீந்து)            swim

முழுவதும்                        in full, fully (பூராவும்)

ஓட்டை                               hole

நீச்சல்                                 swimming

 

Notes

 

  1. Dropped words: The verb (predicate) can be dropped as in காவிரியில் வெள்ளம்,  where ஓடுகிறது is understood. The subject can be dropped as in அக்கரைக்குப் போக வேண்டும், where நான் is understood.
  2. Historical present: This story narrates an event in the past but uses the present tense to highlight the contemporariness of the narrative and the narrator.
  3. கிடையாது: This is an alternate to இல்லை. The connotation is of availability rather than existence. Its counterpart strong verb is கிடைக்காது ‘not available’, which can be paraphrased as ‘(one) cannot get (it)’ to contrast with ‘(it) is not ‘gettable’’.

 

Exercises

 

  1. (அ) சரியா, தப்பா என்று சொல்.

( Say if the following statements are right or wrong)

 

    1. காவிரியில் தண்ணீர் இல்லை.

2. நான் மதுரையில் இருந்தேன்.

3. அக்கரைக்குப் போக பஸ் இருந்தது.

4. அக்கரைக்குப் போக ரயில் இல்லை.

5. தோணிக்காரனிடம் தோணி இருந்தது.

6. நான் பத்து ரூபாய் கொடுத்தேன்

7. நான் தோணிக்காரனிடம் பாடத் தெரியுமா என்று கேட்டேன்.

8. தோணிக்காரன் படித்தவன்.

9. எனக்கு நீந்தத் தெரியும்.

10. இரண்டு பேரும் பாவம்.

 

(ஆ) தப்பு என்று சொன்ன பதில்களுக்குச் சரியான பதிலை எழுது.

 (If you have answered 'wrong', give their right answer in Tamil)

 

  1. The nouns in (அ) are derived from the verbs in (ஆ). Identify the verb for each noun which derives from it. Give the meaning of the verbs.

 

(அ) போக்கு              trend

        இருக்கை          seat

        சொல்                word

        படிப்பு               education, learning

       வாழ்க்கை       life

       நீச்சல்               swimming

 

(ஆ) படி

        சொல்

        வாழ்

        இரு

        நீந்து

       போ