2. தென்னையும் புல்லும்

                                                            2. தென்னையும் புல்லும்

 

 

ஒரு பையன் தென்னை மரத்தைப் பார்த்தான்.  இளநீர் சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை வந்தது.  தென்னை மரத்தில் ஏறினான்.  பாதி ஏறிக் கீழே பார்த்தான்.  தோட்டக்காரன் அப்போது அங்கே வந்துகொண்டிருந்தான்.  பையன் அவனைப் பார்த்ததும் கீழே இறங்கினான்.

 

“என் தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்?” என்று அதட்டினான் தோட்டக்காரன்.

 

“’பசுவுக்குப் புல் கொண்டுவா’ என்று அப்பா சொன்னார்.  புல் பறிக்கத்தான்

ஏறினேன்” என்று பையன் சொன்னான்.

 

“தென்னை மரத்தில் புல் இருக்குமா?” என்று தோட்டக்காரன் அதட்டிக் கேட்டான்.

 

“இல்லை, அண்ணா.  மரத்தில் புல் இல்லை.  அதனால்தான் இறங்கிவிட்டேன்” என்று சொல்லிவிட்டுப் பையன் ஓடிப் போனான்.

 

Notes

  1. இருக்குமா: The future tense form refers to a generic or hypothetical fact. It translates here as ‘would there be’.
  2. இல்லை: The negative form is common to present and past tenses. Here it is used in the past sense ‘was no’.

 

Glossary

தென்னை                                                    coconut (tree)

புல்                                                                 grass

இளநீர்                                                          tender coconut

ஆசை                                                           desire

ஏறு (ஏற, ஏறி)                                           climb up

தோட்டக்காரன்                                      gardener

இறங்கு (இறங்க, இறங்கி)                  climb down

அதட்டு (அதட்ட, அதட்டி)                   rebuke

பசு                                                                cow

கொண்டுவா (வர, வந்து)                    bring

பறி (பறிக்க, பறித்து)                           pluck, pick

உண்டு                                                      is  (இருக்கும்)

 

Exercises

 

  1. (அ) சரியா, தப்பா என்று சொல்.

( Say if the following statements are right or wrong)

 

1. ஒரு பையன் பனை மரத்தைப் பார்த்தான்.

2. அவன் பழம் சாப்பிட ஆசைப்பட்டான்.

3. பையன் மரத்தின் உச்சியில் இருந்தபோது தோட்டக்காரன் வந்தான்.  ('on top of')

4. தோட்டக்காரன் ஜாக்கிரதையாக இறங்கு என்று சொன்னான்.  ('carefully')

5. பையனுடைய அப்பா பையனிடம் இளநீர் கொண்டுவரச் சொல்லியிருந்தார்.

6. பையன் இளநீர் பறிக்க மரத்தில் ஏறினான்.

7. மரத்தில் புல் இல்லாததால் கீழே இறங்கினேன் என்று பையன் சொன்னான்.

8. பையன் சாதுரியமாகப் பதில் சொன்னான். ('cleverly')

9. தோட்டக்காரன் பையன் சொன்னதை நம்பியிருப்பான்.

10. எனக்கு மரம் ஏறத் தெரியும்.

 

(ஆ).தப்பு என்று பதில் சொல்லியிருந்தால் அவற்றிற்குச் சரியான பதில் சொல்

(If you have answered 'wrong', give their right answer in Tamil)

 

  1. தோட்டக்காரன்  is derived from தோட்டம் + காரன். Make similar agent nouns from the nouns below and give the meaning of the nouns you made.

 

  1. பால்                      milk
  2. தபால்                  mail, post
  3. பணம்                  money
  4. வேலை               work, service
  5. சொந்தம்            relation, kinship
  6. பக்கத்து வீடு    next house
  7. கொலை             murder