6. புலவரும் மந்திரியும்

                                                            6. புலவரும் மந்திரியும்

 

 

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்.  அவன் நல்லவன்.  ஆனால் அவனுடைய மந்திரி பெரிய கஞ்சன்.  ஒரு நாள் அரண்மனைக்குப் பல புலவர்கள் வந்தார்கள்.  புலவர்கள் அரசனைப் புகழ்ந்து பாடினார்கள்.  அரசன் மந்திரியிடம், “இவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம்?” என்று கேட்டான்.

 

மந்திரி சொன்னார்: “இவர்கள் உங்களைப் பாடப் பல மைல் நடந்து வந்திருக்கிறார்கள்.  ஒரு மைலுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுக்கலாம்”.

 

ஒரு புலவர் உள்ளூர்க்காரர்.  அவருக்கு ஒரு ரூபாய்தான் கிடைக்கும். அதனால் அவர் “நான் வைகுண்டத்திலிருந்து வருகிறேன்” என்று சொன்னார்.

 

“வைகுண்டத்துக்கு எவ்வளவு தூரம்?” என்று அரசன் மந்திரியிடம் கேட்டான்.

 

விஷ்ணு குடியிருக்கும் வைகுண்டம் என்றால் புலவருக்கு ஆயிரமாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமே! மந்திரி அவ்வளவு பணம் கொடுக்க விரும்பவில்லை.  அதனால், ‘கூப்பிடு தூரம்” என்று சொன்னார்.

 

“எப்படி?” என்று அரசன் கேட்டான். 

 

“ஒரு காலத்தில் கஜேந்திரன் என்று ஒரு யானை இருந்தது.  ஒரு நாள் அந்த யானை பக்கத்தில் இருந்த குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கியது.  ஒரு முதலை அந்த யானையின் காலைக் கவ்விக்கொண்டது.  யானை வேதனையால் கத்தி விஷ்ணுவைக் கூப்பிட்டது.  கூப்பிட்டவுடன் விஷ்ணு வைகுண்டத்திலிருந்து வந்தார்.  யானையின் கஷ்டத்தைப் பார்த்துத் தன் சக்கரத்தை எறிந்து முதலையைக் கொன்றார்.  வைகுண்டத்தில் இருப்பவருக்கு யானையின் குரல் கேட்டது என்றால் அது கூப்பிடு தூரத்தில்தானே இருக்கவேண்டும்?” என்று மந்திரி சொன்னார்.

 

பாவம், புலவர்!  பொய்  சொல்லியும் அவருக்கு ஒரு ரூபாய்தான் கிடைத்தது.

 

Glossary

 

மந்திரி                                                                      minister

பல                                                                              many

புகழ் (புகழ, புகழ்ந்து)                                        praise

மைல்                                                                       mile

வீதம்                                                                        at the rate of

உள்ளூர்க்காரர்                                                    townsman

அதனால்                ஆகவே                                so

வைகுண்டம்                                                        abode of Vishnu

குடியிரு (இருக்க, இருந்து)                           reside

ஆயிரம்                                                                  thousand

விஷ்ணு                                                                 Vishnu, one of Hindu Trinity

கூப்பிடு தூரம்                                                      hailing distance

யானை                                                                    elephant

குளம்                                                                       tank

இறங்கு (இறங்க, இறங்கி)                              get into, get down

முதலை                                                                 crocodile

கவ்விக்கொள் (கொள்ள, கொண்டு)           grasp

கஷ்டம்                                                                  difficulty

சக்கரம்                                                                   wheel

பொய்                                                                       lie

 

Notes

 

  1. சொல்லியும்: Verbal Participle + உம் refers to a past action which did not give the expected result. It translates as ‘in spite of …’, ‘ (even) though ….’. Conditional + refers to a future action which will not give the expected result. This translates as ‘even if…’. பொய் சொன்னாலும் பணம் கிடைக்காது ‘Even if (he) tells a lie, (he) will not get money’
  2. வேதனையால் கத்தி: An alternative way of saying this to use the locative case in place of the instrumental case: வேதனையில் கத்தி. The locative has a range of senses in Tamil. Another example: கல்லால் / கல்லில் கட்டிய வீடு ‘house built with / in stone’

 

Exercises

 

   அ. கீழே உள்ள வாக்கியங்களில் எழுத்துப் பிழைகள் (spelling errors) உள்ளன. அவற்றைத்

     திருத்தி எழுது.

 (There are spelling errors in the sentences below. Correct them and rewrite the sentences)

 

1. அரசன் மிகவும் நள்ளவன்.

2. மந்திரி மிகவும் கன்சன்.

3. அரன்மணைக்குப் புலவர்கல் வருவார்கள்.

4. புலவர்கள் பல மயில் நடந்து வந்தார்கள்.

5. உள்ளூர்ப் புலவருக்கு ஒரு ரூபா கிடைக்கும்.

6. வைகுண்டம் சூப்பிடுதூரம் என்று மன்திரி சொன்னார்.

7. யானை தண்ணி குடிக்கக் குளத்தில் இரங்கியது.

8. முதளை யானையின் காலைக் கப்பிக்கொண்டது.

9. யானையின் கஸ்டத்தைப் பாத்து விஷ்ணு முதலையைக் கொன்னார்.

10. போய் சொன்ன புலவருக்கு ஒரு ரூபாய் கிடைச்சது.

 

. கீழே உள்ள வாக்கியங்களில் உள்ள காலி இடத்தை நிரப்பு.

( Fill in the blanks in the sentences below)

 

 

    புலவர்கள் அரண்மனைக்கு வந்து அரசனைப் -------------------- பாடினார்கள்.

     அரசன் அவர்களுக்குப் ------------------ கொடுக்க விரும்பினான். மந்திரியிடம் யோசனை

     -------------------. புலவர்கள் வந்த --------------- கணக்குப் பார்த்து ஒரு மைலுக்கு ஒரு

     ரூபாய் -------------- கொடுக்கலாம் என்று மந்திரி சொன்னார்.

 

     உள்ளூர்ப் புலவர் ----------------------------- வருகிறேன் என்று சொன்னார். அரசன்

     வைகுண்டம் ----------------------- தூரம் என்று கேட்டான். மந்திரி ------------------ தூரம்

     என்று சொன்னார். அரசன் எப்படி --------------- கேட்டான். மந்திரி புராணக் -------------

     சொன்னார்.

 

    குளத்தில் தண்ணீர் -------------------- இறங்கிய யானையின் காலை ஒரு -----------

    கவ்வியது. யானை வைகுண்டத்தில் -------------- விஷ்ணுவை உதவிக்குக் கூப்பிட்டது.

    யானையின் குரலைக் ------------- விஷ்ணு தன் சக்கரத்தை -------------------- முதலையைக்

    கொன்றார். இதிலிருந்து வைகுண்டம் கூப்பிடு தூரத்தில் ------------- என்று தெரிகிறது.

 

    உள்ளூர்ப் புலவனுக்கு அரசன் ஒரு ----------- கொடுத்தான்.

 

இ. Make a noun from the adjectives or relative participles given below. The noun may

    Indicate the gender and number suggested.

 

    Ex. நல்ல (human plural)  நல்லவர்கள்

 

  1. நல்ல (feminine singular)
  2. கெட்ட (masculine singular)
  3. பழைய (neuter singular)
  4. புதிய (neuter plural)
  5. பெரிய (human singular polite)
  6. வயதான (feminine singular)
  7. படித்த (human plural)
  8. பிடித்த (neuter plural)
  9. முடிந்த (neuter singular)
  10. வேண்டிய (masculine singular)