7. முடியாதது எது?

7.  முடியாதது எது?

 

தெனாலிராமன் கிருஷ்ணதேவ ராயருடைய அரசவையில் ஒரு விகடகவி.  ராயருக்கு அவன் மேல் மிகவும் பிரியம்.  ராயர் தவறு செய்யும்போது அதை நாசுக்காகச் சுட்டிக்காட்டுவது அவன் வழக்கம்.

 

ஒரு நாள் தெனாலிராமன் அரசவைக்குக் கவலையான முகத்தோடு வந்தான்.  ராயர் அவனைப் பார்த்து, "ராமா, எல்லோரையும் சிரிக்கவைக்கும் நீ ஏன் கவலையாக இருக்கிறாய்?" என்று கேட்டார்.  தெனாலிராமன், "நேற்று என் மகள் என்னை ஒரு காரியம் செய்யச் சொன்னாள்.  என்னால் முடியவில்லை.  அந்தக் கவலைதான்" என்றான்.

 

ராயர் சிரித்துவிட்டு, "ஒரு சின்னப் பெண்ணுடைய ஆசையையா உன்னால் நிறைவேற்ற முடியவில்லை.  நான் அதைச் செய்கிறேன்.  என் ஆட்சியில் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்" என்றார். ராமன் "நாளை சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றான்.

 

மறுநாள் ராமன் ஒரு குடத்தையும் பூசணிக்காயையும் அரசவைக்கு எடுத்துக்கொண்டு வந்தான். "அரசே, என் மகள் இந்தப் பூசணிக்காயை இந்தக் குடத்திற்குள் போட்டுத் தரச்சொன்னாள். என்னால் முடியவில்லை.  தங்களால் முடியாதது எதுவுமில்லை.  நீங்கள் இதைச் செய்துகொடுங்கள்" என்றான். 

 

ராயருக்குத் தன் தவறு புரிந்தது. 

 

    Glossary

   

  தெனாலிராமன்                            name of a court jester, Raman of Tenalai

  கிருஷ்ணதேவ ராயர்                    name of the Vijyanagara king

  அரசவை                                            royal court

  விகடகவி                                          jester

  மிகவும்                                               very (ரொம்ப)

  தவறு                                                   error (தப்பு)

  நாசுக்கு                                                discreteness (நாசூக்கு)

  சுட்டிக்காட்டு (–காட்ட, காட்டி)   point out

  வழக்கம்                                             custom

  காரியம்                                               task, thing to be done

  கவலை                                               worry

  ஆசை                                                  wish, worry

  நிறைவேற்று (ஏற்ற, ஏற்றி)       carryout, fulfill

  ஆட்சி                                                  rule, reign (அரசாட்சி)

  சந்தோஷம்                                       happiness (மகிழ்ச்சி)

  சொல்                                                  say (கூறு)

  குடம்                                                  pot (with a narrow mouth) (பானை)

 பூசணிக்காய்                                   pumpkin

 தாங்கள்                                             very respectful address of a person, His Highness

Notes

  1. மேல்/ மீது is added to oblique form of the noun, which is the target of mental states of the subject expressed in the dative such as பிரியம் ‘affection, liking’, கோபம் ‘anger’, வருத்தம் ‘sense of unhappiness. grouse’, பொறாமை ‘jealousy’
  2. -ஆன can be added to nouns to make adjectives and -ஆக to make adverbs as well as what equates in English with predicative adjectives when the verb is ‘be’

அவளுக்குக் கவலையான முகம் ‘she has a sad face’

கவலையாகப் பேசினாள் ‘(she) spoke sadly’

கவலையாக இருந்தாள் ‘she was sad’

The adverb of mental states has an alternative form with the associative case –ஓடு.

கவலையோடு பேசினாள் ‘(she) spoke with sadness’

 

  1. Infinitive + செய் / வை makes the verb causative.

வா ‘come’ --> வரச் செய் / வர வை ‘make (someone come)’

 

  1. Verbal participle + தா / கொடு  gives the meaning that the action is done for the benefit of another. This contrasts with கொள், which means that the action is done for one’s own benefit or some other affect.

வாங்கு ‘buy’

வாங்கிக்கொடு / வாங்கித்தா ‘buy for someone’

வாங்கிக்கொள் ‘buy for yourself’

 

Exercises

 

  1. (அ) சரியா, தப்பா என்று சொல்.

 

  1. கிருஷ்ணதேவ ராயர் தெனாலிராமனுடைய அரசவையில் ஒரு விகடகவி
  2. ராயருக்குத் தெனாலிராமன் மேல் மிகவும் கோபம்
  3. ராயர் தவறு செய்யாதபோது சுட்டிக்காட்டுவது தெனாலிராமன் வழக்கம்
  4. தெனாலிராமன் ஒரு நாள் அரசவைக்குக் கவலையோடு வந்தான்
  5. தெனாலிராமன் எல்லோரையும் கவலைப்பட வைப்பான்
  6. தெனாலிராமன் மகன் செய்யச் சொன்ன காரியத்தைச் செய்ய முடியவில்லை என்றான்
  7. ராயர் தன் ஆட்சியில் யாரும் கவலைப்படக் கூடாது என்று நினைத்தார்
  8. ராமன் அரசவைக்கு ஒரு குடத்தையும் பலாப் பழத்தையும் கொண்டுவந்தான்
  9. குடம் என்றால் பை
  10. ராஜாவால் எதையும் செய்ய முடியுமா?

 

(ஆ) தப்பு என்று சொல்லியிருந்தால் அவற்றிற்குச் சரியான பதில் சொல்

 

 

  1. You can convert an adjective + noun phrase into a sentence with a nominal predicate where the adjective occurs as a noun agreeing with the subject. Convert the phrases below into sentences and give their meaning.

Ex. நல்ல பையன்    பையன் நல்லவன் 'The boy is (a) good (one)’

 

  1. சின்னப் பெண்
  2. பெரிய ராஜா
  3. கெட்டிக்கார ராமன்
  4. அழகான அரண்மனை ['palace’]
  5. சந்தோஷமான முடிவு [‘ending’]

 

  1. Separate the nouns below into positive and negative mental states.

கோபம், சந்தோஷம், கவலை, வருத்தம், மகிழ்ச்சி, ஆசை, பொறாமை