8. தங்க மாம்பழம்

8. தங்க மாம்பழம்

 

ஒரு நாள் கிருஷ்ணதேவராயர் ஊரிலிருந்த பிராமணர்கள் அனைவரையும் அழைத்து ஆளுக்கு ஒரு தங்கத்தில் செய்த மாம்பழம் கொடுத்தார்.  இதைப் பார்த்த தெனாலிராமன், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?" என்று கேட்டான்.  ராயர், "என் தாயார் மரணப்படுக்கையில் இருக்கும்போது மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டார்கள். அந்தச் சமயம் எங்கும் மாம்பழம் கிடைக்கவில்லை.  மாம்பழம் சாப்பிடாமலேயே காலமாகிவிட்டார்கள்.  அவர் ஆன்மா சாந்தி அடைவதற்காக இப்போது பிராமணர்களுக்குத் தங்க மாம்பழம் கொடுக்கிறேன்" என்றார்.

 

இரண்டு நாள் கழித்து, பிராமணர்கள் எல்லோரும் அரசவைக்கு வந்து, "அரசே, தெனாலிராமன் எங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சூடு போட்டான்.  அவனுடைய தலையை நீங்கள் வெட்ட வேண்டும்" என்றார்கள்.  ராயருக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது.

 

தெனாலிராமனை உடனே இழுத்துக்கொண்டு வரச் சொன்னார்.  வந்தவுடன் அவனிடம், "ராமா, நீ பிராமணர்களுக்குப் பெரிய கொடுமை செய்திருக்கிறாய்.  உனக்குத் தலைக்கனம் அதிகமாகிவிட்டது.  உன்னைச் சிரச்சேதம் செய்யப்போகிறேன்" என்றார். 

 

ராமன் பயந்தமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, "அரசே, நான் என்ன தப்பு செய்தேன்?  உங்கள் மேல் உள்ள மதிப்பால் நீங்கள் செய்த மாதிரியே நானும் செய்தேன்" என்றான்.  ராயருக்குக் கோபம் அதிகமாகிவிட்டது. .  "உன் திமிர் இன்னும் அடங்கவில்லை.  நீ இனிமேல் இந்த உலகத்தில் இருப்பது பாவம்" என்றார்.

 

"அரசே, நான் சொல்வதைத் தயவுசெய்து கேளுங்கள்.  என் அம்மா காக்காவலிப்பில் இறந்தார். இறக்கும் முன்னால் வலிப்பிலிருந்து விடுபடுவதற்காகச் சூடு போடச் சொன்னார்.  இரும்பைச் சுடவைத்துக் கொண்டுவருவதற்குள் இறந்துவிட்டார்.  அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதற்காகப் பிராமணர்களை அழைத்துச் சூடு போட்டேன்" என்றான். 

 

ராயருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

Glossary   

 

பிராமணர்கள்                                                  Brahmins

அனைவரையும்                                             all (எல்லோரையும், எல்லாரையும்)

அழை (அழைக்க, அழைத்து)                  invite

தங்கம்                                                               gold

தாயார்                                                               mother (தாய், அம்மா)

மரணப்டுக்கை                                              death bed

ஆசைப்படு (-பட, -பட்டு)                          desire, want

காலமாகு (-ஆக, ஆகி)                             pass away

ஆன்மா                                                          soul (ஆத்மா)                               

சாந்தி அடை (-அடைய, அடைந்து)   rest in peace

கழித்து                                                          after, having passed

சூடு போடு (-போட, -போட்டு)                brand (with an iron rod)

வெட்டு (வெட்ட, வெட்டி)                      cut off

பொங்கு (பொங்க, பொங்கி)                 boil over

இழு (இழுக்க, இழுத்து)                        drag

கொடுமை                                                  cruelty

தலைக்கனம்                                            haughtiness

சிரச்சேதம்                                                execution, severing the head

பய (no infinitive, பயந்து)                       fear, be afraid (பயப்படு)

மாதிரி                                                       as if, as, like                            

உள் (no infinitive or participle form)    be (இரு)

மதிப்பு                                                      respect, value

திமிர்                                                         arrogance

அடங்கு (அடங்க, அடங்கி)             get subdued, get lessened

பாவம்                                                      sin, sinful

அதிகமாகு (-ஆக, -ஆகி)                   increase

தயவுசெய்து                                         please, showing grace

காக்கை வலிப்பு                                  epilepsies

இற (இறக்க, இறந்து)                        die

வலிப்பு                                                    seizure

விடுபடு                                                  be relieved, be released

சுட வை (வைக்க, வைத்து)            make hot

 

Notes

        1. இருக்கும்போது........ஆசைப்பட்டார்கள் The temporal clause could be in non-past to indicate is simultanous in time with the past tense in the finite verb. Alternatively, it could be in the past tense to indicate that it is in the past at the time of  speech: இருந்தபோது     

 

        2. Generic noun +  க்கு ஒரு gives the distributive sense ‘every’

ஆளுக்கு ஒரு கார் இருக்கிறது ‘Every person has a car’

வீட்டுக்கு ஒரு கார் இருக்கிறது  ‘Every house has a car’

Other numerals such a can also be used to indicate different numbers that are distributed.

Alternative construction is to repeat the generic noun without the numeral. The number is unspecified.

ஆளுக்கு ஆள் கார் இருக்கிறது ‘Every person has a car’

வீட்டுக்கு வீடு கார் இருக்கிறது  ‘Every house has a car’  

 

 

    3. –க்காக (க்கு+ ஆக) gives the sense of ‘for the purpose of, for the sake of’

அவன் அமெரிக்காவுக்கு வேலைக்கு / வேலைக்காகப் போனான்

‘He went to the US for work / for the purpose of work’

அவன் அம்மாவுக்கு / அம்மாவுக்காக ஒரு கார் வாங்குனான்

‘He bought a car for the mother / for the use of the mother

அவன் அம்மாவுக்காக எனக்கு ஒரு கார் வாங்குனான்

‘He bought me a car for the sake of mother’

 

Exercises

  1. (அ) சரியா, தப்பா என்று சொல்
  1. ராயர் ஊரிலிருந்த எல்லோரையும் அழைத்துத் தங்க மாம்பழம் கொடுத்தார்.
  2. ராயரின் தாயார் படுக்கையில் இருக்கும்போது மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டார்
  3. அது மாம்பழக் காலம்
  4. ராயரின் தாயார் மாம்பழம் சாப்பிட்டதும் காலமானார்
  5. தாயின் ஆன்மா சாந்தி அடைய ராயர் பிராமணர்களுக்குத் தங்க மாம்பழம் கொடுத்தார்
  6. தெனாலிராமனுக்கு பிராமணர்கள் மேல் கோபம்
  7. ராமன் செய்ததைக் கேட்டு ராயருக்கு சந்தோஷம் பொங்கிக்கொண்டு வந்தது.
  8. நீ செய்த கொடுமைக்கு உன் கையை வெட்டப் போகிறேன் என்று ராயர் ராமனிடம் சொன்னார்
  9. செய்த தப்பை நீங்கள் தெரிந்துகொள்ள நானும் உங்களை மாதிரியே செய்தேன் என்று ராமன் ராயரிடம் சொன்னான்.
  10. தெனாலிராமன் செய்தது சரியா? உன் கருத்து என்ன?

 

 

 

(ஆ) தப்பு என்று சொல்லியிருந்தால் அவற்றிற்குச் சரியான பதில் சொல்

 

  1. ராயர் தெனாலிராமனை இழுத்துக்கொண்டு வரச் சொன்னார்.

Replace இழுத்து in the above sentence with அழைத்து, கூட்டி and தூக்கி, and translate the sentences you made.

 

  1. There are other compounds like தலைக்கனம் that have தலை in them. Give the meaning of such compounds below consulting a dictionary.

     தலைவலி

     தலைவிதி

     தலைநகர்

     தலைப்பிள்ளை

     தலைத்தீபாவளி