9. காகத்தின் கதை

                                                                  9- காகத்தின் கதை

 

 

சீதையும் ராமனும் காட்டில் நடந்தார்கள்.  நல்ல வெயில்.  ராமனுக்குக் களைப்பாக இருந்தது.  இருவரும் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார்கள்.  ராமன் சீதையின் மடியில் தலையை வைத்துப் படுத்தான்.  கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டான்.

 

இந்திரனுடைய மகன் சயந்தன் அந்த வழியாக வந்தான்.  அவன் சீதையைப் பார்த்தான்.  அவளுடைய அழகு அவனைக் கவர்ந்தது.  அவளிடம் பேசிப்பார்த்தான்.  அவள் அவனோடு பேசவில்லை; அவனைப் பார்க்கவும் இல்லை.

 

சயந்தன் ஒரு காகத்தின் உருவம் எடுத்தான்.  சீதையின் தோளில் உட்கார்ந்து அவள் மார்பைக் கொத்தினான்.  சீதைக்கு மிகவும் வலித்தும் அவள் கொஞ்சம்கூட அசையவில்லை.  கொஞ்சம் அசைந்தாலும் ராமனுடைய தூக்கம் கெட்டுவிடுமே என்று அவள் நினைத்தாள்.  அவளுடைய மார்பிலிருந்து ரத்தம் கொட்டியது.  அப்போதும் அவள் அலறவில்லை; அசையவில்லை.  ராமன் மேல் அவளுக்கு அவ்வளவு அன்பு! 

 

ரத்தம் ராமனின் தலையை நனைத்தது.  அந்த ஈரம் பட்டு அவன் விழித்துவிட்டான்.  சீதையின் பொறுமை அவன் மனதை நெகிழ வைத்தது.  காகத்தின் செய்கை பெரும் கோபத்தை உண்டாக்கியது.  பக்கத்தில் புல் நிறைய வளர்ந்திருந்தது.  ஒரு பெரிய புல்லைப் பறித்து வில்லாக வளைத்தான்.  ஒரு சிறிய புல்லை அம்பு ஆக்கினான்.  ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ அல்லவா?  காகம் பறந்தது; மூன்று உலகத்திற்கும் பறந்தது.  ஆனால் அது ராமனின் அம்பிலிருந்து தப்ப முடியவில்லை.  திரும்பவும் ராமனிடமே சயந்தன் வந்தான்.  ராமனுடைய கால்களில் விழுந்தான்.  மன்னிக்கும்படி வேண்டினான்.  “அம்புக்கு ஒரு இலக்கு வேண்டும்!  காமத்தோடு சீதையைப் பார்த்த உன் கண்ணில் ஒன்றைக் காட்டு” என்றான் ராமன். அம்பு சயந்தனின் ஒரு கண்ணைத் துளைத்தது. 

 

இதனால்தான் இன்றைக்கும் காகத்துக்கு ஒரு கண் தெரியாது.  தலையைச் சாய்த்துத்தான் எதையும் பார்க்கும்.

 

Glossary

காகம்                                                                              crow (காக்கா)

வெயில்                                                                         sunshine

களைப்பு                                                                        tiredness, exhaustion

மரத்தடி                                                                          under a tree

மடி                                                                                   lap

அழகு                                                                             beauty

கவர் (கவர, கவர்ந்து)                                               attract

உருவம் எடு (எடுக்க, எடுத்து)                              take the shape of, transform into

மார்பு                                                                              chest

கொத்து (கொத்த, கொத்தி)                                   peck

வலி (வலிக்க, வலித்து)                                         be painful

அசை (அசைக்க, அசைத்து)                                 move

தூக்கம்                                                                          sleep

கெடு (கெட, கெட்டு)                                                 be spoiled

ரத்தம்                                                                             blood

கொட்டு (கொட்ட, கொட்டி)                                   pour

அசை (அசைய, அசைந்து)                                   move, shake

அலறு (அலற, அலறி)                                           scream

நனை (நனைக்க, நனைத்து)                               make (something) wet

ஈரம்                                                                              dampness

படு (பட, பட்டு)                                                          come into contact

விழி (விழிக்க, விழித்து)                                      wake up

பொறுமை                                                                  patience

நெகிழ வை (வைக்க, வைத்து)                          move, loosen up (something)

செய்கை                                                                      action

உண்டாக்கு (ஆக்க, ஆக்கி)                                  create, bring

புல்                                                                                 grass                                                                    

வில்                                                                               bow

வளை (வளைக்க, வளைத்து)                            bend, make an arc

மற்றொரு                                                                  another (இன்னொரு)

சிறிய                                                                            small (சின்ன)

அம்பு                                                                            arrow

வல்லவன்                                                                  expert

ஆயுதம்                                                                       weapon

தப்பு (தப்ப, தப்பி)                                                      escape

திரும்பவும்                                                                again (திரும்பி)

விழு விழ, விழுந்து                                                fall

மன்னி (மன்னிக்க, மன்னித்து)                         pardon

Notes

  1. பேசிப்பார்: Verbal Participle + பார் gives the sense of try doing something. The trial may be to find out if the subject is able to do it, how the something is etc
  2. மேல்: This is the post-position used to refer to the target or recipient of someone’s emotion. சீதைக்கு ராமன் மேல் அன்பு.  Other examples: அவளுக்கு அவன் மேல் காதல் / உயிர்; அப்பா அவள் மேல் கோபப்பட்டார். An alternate is மீது.
  3. நெகிழ வை: Infinitive + வை gives the sense of causing or making an action happen. An alternate for வை is செய்.
  4. மன்னிக்கும்படி: One of the meanings of the infinitive is to indicate the result of an action. வலிக்க வலிக்க அடித்தான். In this sense, the infinitive has an alternative construction: future relative participle + படி. வலிக்கும்படி அடித்தான் ‘(he) hit (me) to be painful’. Another example: துணியை அழுக்குப் போக / போகும்படி துவைத்தான் ‘(he) washed the cloth in such a way that the stain was gone’

 

Exercises

. கீழே உள்ள கேள்விகளுக்குப் பதில் எழுது.

(Answer the following questions)

 

1. காகத்தின் உருவத்தில் வந்தது யார்?

2. காகம் சீதையின் தோளில் உட்கார்ந்தபோது ராமன் என்ன செய்துகொண்டிருந்தான்?

3. காகம் கொத்தி ரத்தம் வந்தும் சீதை ஏன் அசையவில்லை?

4. ராமன் எப்போது விழித்தான்?

5. கோபம் வந்த ராமன் என்ன செய்தான்?

6. ராமனுடைய அம்பு என்ன செய்தது?

7. அம்பிலிருந்து சயந்தன் தப்பித்தானா?

8. சயந்தன் ராமனிடம் என்ன கேட்டான்?

9. ராமன் சயந்தனிடம் என்ன சொன்னான்?

10. காகம் ஏன் எதையும் தலையைச் சாய்த்துப் பார்க்கிறது?

 

 

ஆ. கீழே உள்ள ராமன் – அணில் கதையைத் தமிழில் எழுது.

 (Write in Tamil the following story of Raman and the squirrel.)

 

Seethai was in Lanka. Ravanan had imprisoned her there. Raman wanted to kill Ravanan and bring Seethai back. He was building a bridge from India to go to Lanka. Many people were helping Raman to build the bridge. A squirrel was also carrying pebbles. Raman was touched by the squirrel's act. He stroked its back with his fingers. Hence the squirrel has three white stripes on its back.

 

(Take help from the words below)

 

             Lanka இலங்கை

imprison சிறையில் வை

bring back மீட்டுக்கொண்டுவா

bridge பாலம்

help உதவி செய்

squirrel அணில்

pebble சிறு கல்

be touched நெஞ்சைத் தொடு

act செய்கை

stroke தடவிக்கொடு

stripe வரி

 

இ. Make causative of the verbs below and give their meaning in English.

 

   Ex. நெகிழ்                        நெகிழ வை ‘loosen up (something)’

 

  1. சொல்லு
  2. வா
  3. அழு
  4. ஓடு
  5. நில்லு
  6. படி
  7. தூங்கு
  8. பேசு
  9. அழி ‘get erased’
  10. அழி ‘erase’