11. பிள்ளையாரின் தந்திரம்

                                             11. பிள்ளையாரின் தந்திரம்

 

பரமசிவன் பார்வதியோடு கைலாசமலையில் இருக்கிறார்.  சிவனது கையில் ஒரு அழகான மாம்பழம் இருக்கிறது.  சிவனுடைய பிள்ளைகள் பிள்ளையாரும் முருகனும் அங்கே வருகிறார்கள்.  இருவரும் அந்த மாம்பழத்துக்கு ஆசைப்படுகிறார்கள்.  பழத்தை ஒருவருக்குத்தானே கொடுக்க முடியும்?  யாருக்குக் கொடுப்பது? 

 

சிவன் பிள்ளைகளிடம் சொல்கிறார்: “உங்களில் எவன் வல்லவன் என்று பார்க்கலாம்.  நீங்கள் இருவரும் உலகத்தைச் சுற்றி வாருங்கள்.  எவன் முதலில் திரும்புகிறானோ அவனுக்கு மாம்பழம்”.

 

உடனே முருகன் தனது வாகனமாகிய மயிலில் ஏறிக்கொண்டு பறக்கிறார்.  தொந்திப் பிள்ளையாரோ சிறிது நேரம் யோசிக்கிறார்.  பிறகு பரமசிவனையும் பார்வதியையும் சுற்றுகிறார்.  “பழத்தை எனக்குக் கொடுங்கள்” என்று கேட்கிறார்.

 

“நீ உலகத்தைச் சுற்றவில்லையே?” என்று கேட்கிறாள் பார்வதி.

 

“தாயே! தந்தையே!  நீங்கள் இருவரும்தான் எல்லா உலகத்தையும் படைத்தீர்கள்  எல்லா உலகமும் உங்களுக்குள்ளே அடக்கம்.  உங்களைச் சுற்றுவதும் உலகத்தைச் சுற்றுவதும் ஒன்றுதான்!  உங்களைச் சுற்றினால் உலகத்தைச் சுற்றின மாதிரிதானே?” என்கிறார் பிள்ளையார்.

 

பரமசிவன் என்ன சொல்ல முடியும்?  பழத்தைப் பிள்ளையாருக்கு கொடுத்துவிடுகிறார்.

 

Glossary

 

தந்திரம்                                                            trick

கைலாசமலை                                            Mount Kailash, the abode of Shiva

மாம்பழம்                                                    mango fruit

பிள்ளை                                                       child, son

ஆசைப்படு (-பட, -பட்டு)                       desire

எவன்                                                            who

வல்லவன்                                                  one who is adept, smart

உலகம்                                                        planet earth, world

சுற்று (சுற்ற, சுற்றி)                                go round

திரும்பு (திரும்ப, திரும்பி)                  come back, return

வாகனம்                                                     vehicle, mount

பற (பறக்க, பறந்து)                                 fly

தொந்தி                                                        tummy

சிறிது                                                           a bit, a little  (கொஞ்சம்)

யோசி (யோசிக்க, யோசித்து)            think

தாய்                                                              mother

தந்தை                                                         father

படை (படைக்க, படைத்து)                 create

அடக்கம்                                                    be included

 

Notes

 

  1. சிவனது: -அது is a genitive suffix used in the formal style. An alternate: சிவனுடைய.  Another example: எனது, என்னுடைய
  2. எவன் முதலில் திரும்புகிறானோ அவனுக்கு: Here the subordinate clause with a question words ends with ஓ and the pronoun of the question word is repeated as the head of the  clause in the appropriate case required in the main clause. This is equivalent of a relative clause, which does not have a noun in it referring to the head noun. The relative participle will become a participial noun in the alternate relative clause if the head noun is a pronoun: முதலில் திரும்புகிறவனுக்கு. The difference in translation between them is this: the former is ‘whoever comes first’ and the latter ‘who comes first’ or ‘the one who comes first’.
  3. வாகனமாகிய மயில்: The noun preceding ஆகிய explicates what the noun after it is. Another example: மாணவனாகிய நான் ‘I, who is a student’
  4. பிள்ளையாரோ: ஒ added to the first word of a following sentences has the sense of ‘on the other hand’
  5. சுற்றவில்லையே: ஏ at the end of a sentence with a verb makes the sentence a tag question asking for confirmation. It translates as ‘did you (etc)?’. When the sentence does not end in a verb, தானே is used for this meaning: சுற்றின மாதிரிதானே?
  6. When you call a person the noun itself used with no change. The final vowel of the length may be lengthened when the person is at a distance: தம்பீ. In formal address, -ஏ is added:தாயே
  7. அடங்கு: One of the senses of this verb is ‘contain’. Nouns derived from such verbs that have a transitive pair (அடக்கு) have abstract meaning: அடக்கம் ‘humility’. It has a concrete meaning ‘that which is contained’ in some uses, which is equivalent to அடங்கியது.
  8. சுற்றின மாதிரி. மாதிரி translates as ‘like, as if’. It has an alternate with the noun form of the relative participle: சுற்றினது மாதிரி. When போல is used instead of மாதிரி, only the noun form can be used and it will be in the accusative: சுற்றினதைப் போல

 

Exercise

 

. கீழ் வரும் கேள்விகளுக்குப் பதில் எழுது.

(Answer the following questions)

 

1. சிவனுக்கு எத்தனை பிள்ளைகள்?

2. அவர்கள் எதற்கு ஆசைப்பட்டார்கள்?

3. சிவன் என்ன பரீட்சை வைத்தான்?

4. முருகனுடைய வாகனம் என்ன?

5. பிள்ளையாருடைய வாகனம் என்ன என்று தெரியுமா?

6. பிள்ளையார் ஏன் உலகத்தைச் சுற்ற முடியவில்லை.

7. பரமசிவனையும் பார்வதியையும் சுற்றியது எப்படி உலகத்தைச் சுற்றியது ஆகும்?

8. சிவன் பழத்தைப் பிள்ளையாருக்குக் கொடுத்தது சரியா?

9. பிள்ளையார் செய்தது தந்திரமா, புத்திசாலித்தனமா?

10. நீ சிவனாக இருந்தால் என்ன செய்திருப்பாய்?

 

ஆ. The names of parts of flora are made by combining the base word

    and the name of the part with appropriate sandhi changes. The base

    may take uncommon form (mostly with –அம்) in some cases. Make  

    the compound nouns of the following. When the base takes a new

    form, it is given in parentheses.

 

    Ex. ரோஜா, பூ              ரோஜாப்பூ

 

  1. மல்லிகை ‘jasmine’, செடி
  2. கத்தரி, காய்
  3. வெள்ளரி ‘cucumber’, பிஞ்சு
  4. வாழை, பழம்
  5. ஆப்பிள், பழம்
  6. பனை ‘Palmyra’, மரம்
  7. எலுமிச்சை (எலுமிச்சம்) ‘lemon’, பழம்
  8. மா (மாம்), காய்
  9. பனை (பனம்), பழம்
  10. துவரை (துவரம்) ‘pigeon pea’, பருப்பு

 

இ. படு is added to nouns of mental disposition to derive a verb. Make

    verbs from the nouns given below using படு and give their meaning.

 

    Ex. ஆசை                        ஆசைப்படு ‘desire, have desire’

 

  1. கோபம்
  2. சந்தோஷம்
  3. வருத்தம்
  4. பயம்
  5. கவலை

 

ஈ. Most of the verbs similar to the ones you made a transitive counterpart

   படுத்து In place of படு. Make the transitive forms of the verbs you

   made.

 

Ex. அவசரம் ‘hurry’           அவசரப்படு ‘be in a hurry’  அவசரப்படுத்து ‘hurry up (someone)’

   (Note that ஆசைப்படுத்து does not exist; there is instead ஆசைப்பட வை)