12. விதி

                                                           12 - விதி

 

தமிழ்நாட்டில் ஈரோடு என்ற ஊரில் ஒரு சிறிய தெரு.  காலை மணி ஏழு.  பெட்டிக் கடைக்காரன் கடையைத் திறந்தான்.  அதாவது பூட்டைத் திறந்தான்.  முன்பக்கம் கதவு போல அமைந்த பகுதியைத் தூக்கி, ஒரு கம்பினை முட்டுக் கொடுத்து, நிற்க வைத்தான்.  கடை திறந்தாயிற்று.

 

“ஒரு அணாவுக்கு வெற்றிலை கொடு, அப்பா” என்ற குரல் கேட்டது.  கடைக்காரன் நிமிர்ந்து பார்த்தான்.  பஞ்சாங்க ஐயர் நின்றுகொண்டிருந்தார்.  அவன் வெற்றிலையை எடுத்து ஐயருக்குக் கொடுத்தான்.

 

“என்ன அப்பா!  காலை நேரத்திலே உன் முகத்தில் இப்படிச் சோகம் வழிகிறது!” என்றார் ஐயர். 

 

“வீட்டுக் கவலைதான், சாமி.  ராத்திரி பூராவும் என் பிள்ளை தூங்கவில்லை.  உடம்பு நெருப்பாய் சுட்டது.  காலையில் “ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோ” என்று என் வீட்டுக்காரியிடம் சொல்லிவிட்டு வந்தேன்”.

 

“கவலைப்படாதே!  கவலைப்பட்டு என்ன ஆகப் போகிறது?  எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.  ‘அன்றைக்கு எழுதின எழுத்தை அழித்து எழுத முடியுமா?’”

 

அப்போது கடைக்கு வந்தான் ஒரு பையன்.  “அப்படியா, சாமி?  எல்லாம் விதிப்படிதான் நடக்குமா?” என்றான் அவன்.

 

“ஆமாடா” என்றார் ஐயர்.

 

பையன் காலால் கம்பை ஒரு தட்டுத் தட்டிவிட்டான்.  பெட்டிக்கடைக் கதவு படாரென்று கீழே இறங்கியது.  கதவின் விளிம்பு ஐயரின் மண்டையில் வெட்டியது.  ரத்தம் கொட்டியது.  ஐயர் கூச்சல் போட்டார்.  கடைக்காரன் குதித்து வந்தான்.  பையன் ஓட்டம் எடுத்தான்.  சிறிது நேரத்தில் கடைக்காரன் பையனைப் பிடித்துவிட்டான்; பையனை இழுத்துக்கொண்டு வந்து ஐயருக்கு முன்னாலே நிறுத்தினான்.

 

ஒரு கூட்டம் கூடிவிட்டது.

 

“பாவி!  சண்டாளா!” என்று ஐயர் திட்ட ஆரம்பித்தார்.

 

“என்ன சாமி!  எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்று சொன்னீர்களே!  இன்றைக்கு நீங்கள் காயப்பட வேண்டும் என்பது உங்கள் விதி!” என்றான் பையன்.

 

“வாய்க்கொழுப்பைப் பார்!  இன்றைக்கு நீ செம்மையாக அடிபட வேண்டும் என்பது உன் தலைவிதி” என்று கடைக்காரன் கையை ஓங்கினான்.

 

கூட்டத்தில் ஒருவன், “அடடே!  வேங்கடசாமி நாயக்கர் பையனா?” என்றான்.  நாயக்கர் அந்த வட்டாரத்தில் செல்வாக்கு உடையவர்.  பையன் அடிபடாமல் தப்பினான்.

 

ஐயர் முனகிக்கொண்டே ஆஸ்பத்திரியைப் பார்த்துப் போனார்.

 

ஈ. வே. ராமசாமி நாயக்கர் என்ற அந்தப் பையன் பிற்காலத்தில் பகுத்தறிவு இயக்கத்தின் தலைவர் ஆனான்.

 

Glossary

 

விதி                                                                fate

தெரு                                                             street

பெட்டிக்கடைக்காரன்                           owner of a petty shop, kiosk

கடை                                                            shop

திற  (திறக்க, திறந்து)                            open

அதாவது                                                     that is

பூட்டு                                                            lock

அமை (அமைய, அமைந்து)              be formed, happen to be (intransitive of அமை ‘form, make to be’)

கதவு                                                             door

பகுதி                                                             section

தூக்கு  (தூக்க, தூக்கி)                             lift

கம்பு                                                              pole, stick

முட்டுக் கொடு (கொடுக்க, கொடுத்து)  support

நிற்க வை (வைக்க, வைத்து)               make (something) stand

நிமிர்ந்து பார் (பார்க்க, பார்த்து)             look up

வெற்றிலை                                                  betel leaf

சோகம் வழி (வழிய, வழிந்து)              be filled with sorrow

ராத்திரி                                                            night

பூராவும்                                                           all

தூங்கு (தூங்க, தூங்கி)                              sleep

உடம்பு                                                            body

நெருப்பு                                                          fire

சுடு (சுட, சுட்டு)                                            be hot, burn

ஆஸ்பத்திரி                                                 hospital

கொண்டு போ (போக, போய்)                 take along

கவலைப்படு                                                worry

விதி                                                                 fate

எழுது (எழுத, எழுதி)                                write

அழி (அழிக்க, அழித்து)                          wipe off

நட (நடக்க, நடந்து)                                   walk

தட்டுத் தட்டு (தட்ட, தட்டி)                    knock down

விளிம்பு                                                       edge

மண்டை                                                      head   Alternate: தலை                                           

வெட்டு (வெட்ட, வெட்டி)                     cut

கொட்டு (கொட்ட, கொட்டி)                 gush, pour

கூச்சல்                                                        loud voice, shouting

குதி  (குதிக்க, குதித்து)                          jump

பையன்                                                        boy, son

ஓட்டம் எடு (எடுக்க, எடுத்து)              take to heels

பிடி (பிடிக்க, பிடித்து)                              catch, get hold of

நிறுத்து  (நிறுத்த, நிறுத்தி)                   produce,  make one stand

கூட்டம்                                                        crowd

பாவி                                                              a term of abuse, sinner

சண்டாளன்                                                a term of abuse, cruel person

ஆரம்பி  (ஆரம்பிக்க, ஆரம்பித்து)    start

காயப்படு  (காயப்பட, காயப்பட்டு)   get wounded

வாய்க் கொழுப்பு                                      insolence

செம்மையாக                                            severely

தலை விதி                                                   fate

ஓங்கு  (ஓங்க, ஓங்கி)                               raise

வட்டாரம்                                                      area

செல்வாக்கு                                                 influence

தப்பு  (தப்ப, தப்பி)                                      escape

முனகு  (முனக, முனகி)                       whine

பிற்காலம்                                                    later times

பகுத்தறிவு                                                  rational thinking

இயக்கம்                                                      movement

தலைவர்                                                       leader

 

Notes

 

  1. கம்பினை: -இன்- links the case marker with the noun. It is optional is absent in speech. The alternate form: கம்பை. Another example: வீட்டிற்கு / வீட்டுக்கு
  2. திறந்தாயிற்று: This construction is used when the event or doing is highlighted, not the doer or the subject. When this is not the case the construction would be கடைக்காரன் கடையைத் திறந்துவிட்டான். Another example: இந்தப் படத்தைப் பார்த்தாயிற்று “Seeing this film is done’. Even when the subject is present, the event may be highlighted as in நான் சாப்பிட்டாயிற்று ‘My eating is done’.
  3. கொடு, அப்பா: There are terms referring to the addressee that are added at the end of a sentence. They are chosen depending on the relation the speaker wishes to express based on the age, status and gender of the addressee. அப்பா or –ப்பா is chosen when the relation is equal or lower, but endearing. The feminine counterpart of it is அம்மா or –ம்மா. Other addressee terms are சாமி, ஐயா, சார் / மேடம், (அ)டா / (அ)டி, ங்க. As the context of their use is conversation, they are found commonly in speech.
  4. நெருப்பாய்: An alternate is நெருப்பாக. The adverbial form here has the sense of comparison. This word translates as ‘like fire’. Another example: கல்லாய் நின்றான் ‘(he) stood like a stone’. The sense of comparison is organic unlike the structural sense of comparison of மாதிரி, போல.
  5. ஒரு தட்டுத் தட்டு: Constructions like this one where the verb is preceded by its homophonous noun form and ஒரு suggests severity of action. It translates as ‘give an X’). The given form would translate as ‘give a push’. Another example: ஒரு அடி அடி. The noun in this construction may not be a usual noun: ஒரு சிரி சிரிச்சான், பார்.
  6. மண்டையில் வெட்டியது: The locative indicating the location of action may alternate with the accusative indicating the object of action: மண்டையை வெட்டியது. Another example: கண்ணில் குத்தினான் / கண்ணைக் குத்தினான் ‘poked into the eye / poked the eye’
  7. அடிபட: verb roots of harming action + படு gives the sense of suffering the harm. It is semantically closer to what is called ‘get passive’ (‘get beaten up’). Another example: விடுபடு ‘get left out’. Most of these verb roots in this construction have homophonous nouns.
  8. என்பது உன் தலைவிதி: என்பது is the noun form ‘that’; it makes the whole of the preceding sentence a noun, which becomes the subject of the sentence whose predicate is a noun. If என்று is used instead of என்பது, a verb for the main clause such as இருந்தது ‘was’ would be understood.
  9. பார்த்துப் போனார்: பார்த்து is a verbal participle form, which is used like a post-position linking the noun and the verb, and it means ‘towards’. This form, however, retains to some degree depending on the noun and the verb its literal sense of ‘seeing, looking at’. The alternate: நோக்கி. Another example: கத்தியை வைத்து வெட்டினார் ‘(he) cut holding a knife = cut with a knife’

 

Exercise

 

கீழே உள்ள வாக்கியங்களை இன்னும் ஒன்று அல்லது பல  வார்த்தைகள் சரியாகச் சேர்த்துப் பெரிய வாக்கியம் ஆக்கு

   Make longer the sentences below by adding one or more words appropriately.

 

1. கடைக்காரன் கடையைத் திறந்தான்.

2. கடைக்காரன் கதவை மேலே நிற்க வைத்தான்.

3. கடைக்காரன் நிமிர்ந்து பார்த்தான்.

4. கடைக்காரன் வெற்றிலையைக் கொடுத்தான்.

5. உன் முகத்தில் சோகம் வழிகிறது.

6. பிள்ளைக்கு உடம்பு சுட்டது.

7. என் வீட்டுக்காரியிடம் சொன்னேன்.

8. பையன் கடைக் கம்பைத் தட்டிவிட்டான்.

9. கடைக்கதவு கீழே இறங்கியது.

10. ஐயரின் மண்டையில் ரத்தம் கொட்டிற்று.

11. பையன் ஓடினான்.

12. கடைக்காரன் பையனை இழுத்துக்கொண்டுவந்து நிறுத்தினான்.

13. இன்றைக்கு நீங்கள் காயப்பட வேண்டியது உங்கள் விதி.

14. இன்றைக்கு நீ அடிபட வேண்டும் என்பது உன் விதி.

15. ஐயர் ஆஸ்பத்திரிக்குப் போனார்.

 

ஆ. Light verbs with verbal participle drop their meaning in isolation and add nuanced meaning

      to the meaning of the verb in the participle.

    One such verb is வழி ‘spill over’. It adds the sense of ‘in excess’.

    Give the expressions in English that come close to this meaning in Tamil in the constructions

    on the right column below.

 

    Ex. கூட்டம் நிரம்பியது                   கூட்டம் நிரம்பி வழிந்தது

        The crowd filled (the room)  The crowd spilled over (the room)

 

  1. உணர்ச்சி பொங்கியது                     உணர்ச்சி பொங்கி வழிந்தது

             Emotion boiled

 

        2. அழுதான்                                              அழுது வழிந்தான்

            (He) cried

 

வழி can occur also without the verbal participle such as நிரம்பி. Give the closest expressions in English to the Tamil sentences which use வழி in this way.

 

Ex. கூட்டம் வழிந்தது ‘The crowd spilled over (the room)’

 

What will be the English sentences that will be closest to the Tamil sentences below?

 

  1. உன் முகத்தில் சோகம் வழிகிறது
  2. அவன் முகத்தில் அசடு (‘foolishness, sheepishness’) வழிந்தது.

 

இ. படு is added to nouns to give the sense of ‘experiencing something’.

    But this sense divides into two: ‘be subjected to’, which translates as

    ‘get done’ (அடிபடு ‘get beaten’) and ‘be overtaken by’, which  

    Translates as ‘get into a mental state’ (ஆசைப்படு ‘get desire, desire’).

    Classify the following sentences into these two kinds and translate

    them.

 

  1. கூட்டத்தில் சிலர் மிதிபட்டனர்
  2. என் பேச்சைக் கேட்டுச் சிலர் கோபப்பட்டனர்.
  3. எதற்கும் வருத்தப்படாதே.
  4. இப்படிப் பேசி உதைபடாதே.
  5. கடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வழிந்தது.
  6. இவள் எதற்கும் அவசரப்படுவாள்.
  7. இதற்கு ஏன் இவள் இவ்வளவு வருத்தப்படுகிறாள்?
  8. வெட்டுப்பட்ட இடத்தில் மருந்து போட்டான்.
  9. சண்டையில் சிலர் காயப்பட்டனர்.
  10. உன் பேச்சு அங்கே எடுபடாது.

(Help: சிலர் ‘some people’, மிதி ‘step on, trample’, உதை ‘kick, beat’, கடி ‘bite’, வெட்டு ‘cut’, சண்டை ‘fight’, காயம் ‘injury’, எடு ‘take up, pass, accept’)

 

ஈ. Some verbal participles may be used as post-positions to link a noun with the verb.

ஆஸ்பத்திரியைப் பார்த்துப் போனார் ‘(He) went towards the hospital’

Fill in the gap in the following sentence with பார்த்து and translate them.

  1. வீட்டைப் --------------- போ.

 

  1. ஜன்னலைப் ----------------- கல்லை வீசினான். (வீசு ‘throw’)

 

  1. என் மாமாவைப் ----------------------- எல்லாரும் பயப்படுவார்கள்.

 

  1. என்னைப் ---------------------- சிரிக்காதே.

 

  1. என் வேலையைப் ---------------------- என்ன நினைக்கிறாய்?