5. காக்கையும் நரியும்
ஒரு பாட்டி ஒரு மரத்தின் நிழலில் வடை சுட்டு விற்றுக்கொண்டிருந்தாள். அவள் வடையை வாங்கிச் சாப்பிட எப்போதும் கூட்டம் இருக்கும். அன்று யாரும் இல்லை. சுட்ட வடை கூடையில் இருந்தது. மரத்தின் மேல் இருந்த காக்கை கூடையைப் பார்த்தது. அதற்குப் பசி. அன்றைக்கு அதற்கு ஒன்றும் சாப்பிடக் கிடைக்கவில்லை. கூடையிலிருந்த வடையைச் சாப்பிட நினைத்தது.
பாட்டி தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது காக்கா பறந்து வந்து ஒரு வடையைக் கொத்திக்கொண்டு போயிற்று. தூரத்தில் இருந்த ஒரு மரத்திற்குப் போய் வடையைச் சாப்பிடப் போனது. அப்போது அந்தப் பக்கம் ஒரு நரி வந்தது. அதற்கும் பசி. காக்கையிடமிருந்த வடையைப் பறித்துச் சாப்பிட நினைத்தது. அதைப் பறிக்க ஒரு யோசனை வந்தது.
“காக்கா, காக்கா, நீ மிகவும் அழகாய் இருக்கிறாய். உன் குரலும் இனிமையாக இருக்கும். எனக்கு அதைக் கேட்க ஆசையாக இருக்கிறது, எனக்காக ஒரே ஒரு பாட்டு பாடு” என்று கெஞ்சியது. காக்கா இந்தப் புகழ்ச்சி வார்த்தைகளில் மயங்கியது. பசிகூட மறந்துவிட்டது. தன் வாயைத் திறந்து ‘கா, கா’ என்று கத்தியது. வடை கீழே விழுந்தது.
நரி வடையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிட்டது.
Glossary
நிழல் shade
சுடு (சுட, சுட்டு) fry
வில் (விற்க, விற்று) வில்லு sell
கூட்டம் crowd
கூடை basket
அன்றைக்கு அண்ணைக்கு that day
நினை (நினைக்க, நினைத்து) நெனை (நெனைக்க,நெனைச்சு) think of
பற (பறக்க, பறந்து) fly
கொத்து (கொத்த, கொத்தி) pick
தூரம் distance
பறி (பறிக்க, பறித்து) பறி ( பறிச்சு) snatch
யோசனை idea, thought
குரல் voice
இனிமை sweet
கெஞ்சு (கெஞ்ச, கெஞ்சி) entreat
புகழ்ச்சி flattery
வார்த்தை word
மயங்கு (மயங்க, மயங்கி) lose mind
மற (மறக்க, மறந்து) forget
கத்து(கத்த, கத்தி) crow
விழு (விழ, விழுந்து) fall down
காடு jungle
Spelling Correspondence
Before and other stop consonants corresponds with two stop consonants.
விற்க விக்க
-ற்ற்- corresponds with -த்த்-, and ன்ற் with ண்ண்.
விற்று வித்து
அன்றைக்கு அண்ணைக்கு
Past tense
-ற்ற்- corresponds with –ச்ச் and the past tense suffix இ is dropped.
போயிற்று போச்சு
An alternate form of போயிற்று in formal style is போனது
கெஞ்சிற்று கெஞ்சுச்சு
மயங்கிற்று மயங்குச்சு
An alternate forms of கெஞ்சிற்று, மயங்குச்சு in formal style are கெஞ்சியது, மயங்கியது
-த்த்- after the verb than ends in இ or ஐ corresponds with –ச்ச்.
நினைத்தது நெனைச்சுது
Verb ending
The neuter singular -அது ending corresponds with -உது and this may alternate with -ச்சு.
நினைத்தது நெனைச்சுது / நெனைச்சுச்சு
விழுந்தது விழுந்துது / விழுந்துச்சு
Case
இடம் கிட்டே
இடமிருந்து கிட்டேருந்து
காக்கையிடமிருந்து காக்காகிட்டேருந்து
Verb of Aspect
The completive விடு corresponds with –டு / ரு
பறந்துவிட்டது பறந்துட்டுது / பறந்துருச்சு
ஓடிவிட்டது ஓட்டிட்டுது / ஓடிருச்சு
The self-affective கொண்டு and durative கொண்டிரு correspond respectively with கிட்டு and கிட்டுரு.
எடுத்துக்கொண்டு எடுத்துக்கிட்டு
பார்த்துக்கொண்டிருந்தபோது பாத்துக்கிட்டுருந்தப்போ
Temporal clause
The temporal class marker போது / பொழுது corresponds with –ப்போ / ப்ப.
Adverb
The marker of the adverb –ஆக / -ஆய் corresponds with -ஆ.
Lexical Alternates
அன்றைக்கு - அன்று