1. உங்கள் பெயர் என்ன?

உரையாடல் 1

                           உங்கள் பெயர் என்ன?

 

ராஜா  -  என் பெயர் ராஜா.  உங்கள் பெயர் என்ன?

 

ஜிம்   -  என் பெயர் ஜிம்.  உங்கள் ஊர் எது?

 

ராஜா  -  எங்கள் ஊர் மதுரை.

 

ஜிம்   -  இது உங்கள் வீடா?

 

ராஜா  -  இல்லை.  இது என் தம்பி வீடு.

 

ஜிம்    -  உங்கள் தம்பி யார்?

 

ராஜா  -  இவன்தான் என் தம்பி.

 

ஜிம்  -   இது உங்கள் புஸ்தகமா?

 

ராஜா  -  ஆமா.  இது என் புஸ்தகம்.