2. இதைப் படியுங்கள்

உரையாடல் 2

                                     இதைப் படியுங்கள்

 

ஜிம்   -  இது தமிழ் புஸ்தகமா, இங்கிலீஷ் புஸ்தகமா?

 

ராஜா  -  இது தமிழ் புஸ்தகம்.

 

ஜிம்   -  அதைக் கொடுங்கள்.

 

ராஜா  -  இந்தாருங்கள்.  இதைப் படியுங்கள்.

 

ஜிம்   -  எனக்குத் தெரியாது.  நீங்கள் எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுங்கள்.

 

ராஜா  -  சரி.  உட்காருங்கள்.

 

ஜிம்   -  இது என்ன எழுத்து?

 

ராஜா  -  கொஞ்சம் இருங்கள்... தம்பி, இவருக்கு காப்பி கொண்டுவா.

 

தம்பி  -  அண்ணா, இந்தாருங்கள் காப்பி.

 

ராஜா  -  ஜிம், கொஞ்சம் காப்பி சாப்பிடுங்கள்.