உரையாடல் 3
காப்பி வேண்டாம்
ஜிம் - எனக்கு காப்பி வேண்டாம்.
ராஜா - பாலாவது சாப்பிடுங்கள்.
ஜிம் - சரி, கொண்டுவாருங்கள்.
(ஜிம் பால் குடிக்கிறார்.)
ராஜா - இப்போது இதைப் படியுங்கள்.
(ஜிம் புஸ்தகத்தைப் படிக்கிறார்.)
ஜிம் - இப்படித்தான் படிக்க வேண்டுமா?
ராஜா - இல்லை. அப்படிப் படிக்கக்கூடாது.
ஜிம் - எப்படிப் படிக்க வேண்டும்?
(ராஜா படிக்கிறார்.)
ராஜா - இப்படிப் படியுங்கள்.
ஜிம் - நான் வீட்டுக்குப் போக வேண்டும். நாளைக்குப் படிக்கிறேன்.
ராஜ - சரி.
ஜிம் - போய்விட்டு வருகிறேன்.
ராஜா - போய்விட்டு வாருங்கள்.