5. ஓட்டலுக்குப் போகிறோம்

உரையாடல் 5

                                       ஓட்டலுக்குப் போகிறோம்

 

ஜிம்   -  நாம் எந்த ஓட்டலுக்குப் போகிறோம்?

 

ராஜா  -  நாம் உடுப்பி ஓட்டலுக்குப் போகிறோம்.

 

ஜிம்   -  அது நல்ல ஓட்டலா?

 

ராஜா  -  ஆமாம்.  அங்கே டிபன் மிகவும் நன்றாக இருக்கும்.

 

(இரண்டு பேரும் ஓட்டலுக்குள் போகிறார்கள்.)

 

ராஜா  -  நீங்கள் தோசை சாப்பிடுகிறீர்களா?  இட்லி சாப்பிடுகிறீர்களா?

 

ஜிம்   -  நீங்கள் என்ன சாப்பிடப் போகிறீர்கள்?

 

ராஜா  -  நான் பூரி சாப்பிடப் போகிறேன்.

 

ஜிம்   -  நானும் பூரி சாப்பிடுகிறேன்.

 

(ராஜா சர்வரைக் கூப்பிடுகிறார்)

 

சர்வர்  -  சார், என்ன வேண்டும்?

 

ராஜா  -  ஆளுக்கு ஒரு பூரி கொண்டுவா.

 

சர்வர்  -  இந்தாருங்கள்.  வேறு என்ன வேண்டும்?

 

ராஜா  -  இரண்டு காப்பி.  மொத்தம் எவ்வளவு ஆகிறது?

 

சர்வர்  -  எழுபது ரூபாய்.  இந்தாருங்கள், பில்.