உரரையாடல் 6
சினிமா பார்க்க வேண்டும்
ராஜா - சினிமாவுக்குப் போகலாமா?
ஜிம் - நானும் ஒரு தமிழ் சினிமா பார்க்க வேண்டும். வாருங்கள், போவோம்.
ராஜா - வைரம் தியேட்டரில் ஒரு நல்ல படம் நடக்கிறது. அங்கே போவோம்.
ஜிம் - அது எவ்வளவு தூரம்?
ராஜா - ஒரு மைல் இருக்கும்.
ஜிம் - அது மதுரையிலேயே நல்ல தியேட்டரா?
ராஜா - ஆமா. அதுதான் மதுரையிலேயே பெரிய தியேட்டர்.
ஜிம் - நீங்கள் அடிக்கடி சினிமா பார்ப்பீர்களா?
ராஜா - வாரத்துக்கு ஒன்று பார்ப்பேன்.
ஜிம் - தமிழ் சினிமா நன்றாக இருக்குமா?
ராஜா - நீங்கள் இன்றைக்குப் பாருங்கள். பிறகு சொல்லுங்கள்.
ஜிம் - டிக்கட் எவ்வளவு?
ராஜா - இங்கே இரண்டு மூன்று வகுப்புகள் இருக்கின்றன. நாம் அறுபது ரூபாய்
டிக்கட்டுக்குப் போகலாம்.