Text 2
ஜிம்முக்கு ஒரு நாள் பாடம் படிக்கப் பிடிக்கவில்லை. ராஜாவும் அவரும் வெளியே போகிறார்கள். ஒட்டலுக்குச் சாப்பிடப் போகிறார்கள். ராஜாவுடைய தம்பி கூட வரவில்லை. அவன் பரிட்சைக்குப் படிக்க வேண்டும். உடுப்பி ஓட்டல் நல்ல ஓட்டல். அதற்குள் நுழைகிறார்கள். ராஜாவும் ஜிம்மும் இட்லி, தோசை சாப்பிடவில்லை. ராஜா பூரி கொண்டுவரச் சொல்கிறார்; ஜிம்மும் அதையே கேட்கிறார். பிறகு இரண்டு பேரும் இனிப்பு சாப்பிடுகிறார்கள். ஐம்பது ரூபாய்க்கு பில் வருகிறது.
Notes
Grammatical Forms
Formal with Alternates Informal
அதற்குள் அதற்குள்ளே அதுக்குள்ளே (அன் = O)
( -அன்- is another link form that (not -இன்-) links only அது, இது, எது)
பிடிக்கவில்லை பிடிக்கலை (இல்லை = லை)
(பிடிக்க + இல்லை = பிடிக்கவில்லை (it is written as one word with the glide –வ்-)
படிக்க வேண்டும் படிக்கணும் (வேண்டும் = வேணும்)
போகிறார்கள் போறாங்க (ஆர்கள் = ஆங்க; கிறு = று)
Spelling
பரிட்சை பரீட்சை பரிச்சை (ட்ச = ச்ச) (stop consonants are assimilated)
நுழை நொழை (உ = ஒ before single consonant with ஐ or அ)
கொண்டுவர கொண்டார (வ = ஆ)
Sandhi
The stop consonant doubles after the infinitive.
பார்க்க போ --> பார்க்கப் போ
Words
பரிட்சை தேர்வு
Glossary
கூட ‘along with’
நுழை (நுழைய) ‘enter’
இனிப்பு ‘sweet’