உரையாடல் 7
படம் பிடிக்கிறதா?
ராஜா - உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கிறதா?
ஜிம் - மிகவும் பிடிக்கிறது. உங்களுக்கு?
ராஜா - எனக்கும் பிடிக்கிறது. கதை எப்படி இருக்கிறது?
ஜிம் - எனக்குத் தமிழ் நன்றாகத் தெரியாது. அதனால் கதை நன்றாய்
புரியவில்லை.
ராஜ - இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் நன்றாகப் புரியும். அப்போது தமிழ்ப்
படமும் நன்றாகப் புரியும்.
ஜிம் - நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
ராஜா - வாருங்கள். காப்பி சாப்பிடலாம்.
(இரண்டு பேரும் ஓட்டலுக்குள் போகிறார்கள். அங்கே ஒரு நாற்காலியில்
உட்காருகிறார்கள்.)
ஜிம் - எனக்கு காப்பி வேண்டாம். பால் கொண்டுவரச் சொல்லுங்கள்.
ராஜா - சரி. தோசை சாப்பிடுகிறீர்களா?
ஜிம் - இல்லை. எனக்குப் பால் போதும்.