8. எங்கே இருக்கிறீர்கள்?

உரையாடல் 8

                                             எங்கே இருக்கிறீர்கள்?

 

 

 

ஜிம்   -  நான் வீட்டுக்குப் போக வேண்டும்.  எப்படிப் போகலாம்?

 

ராஜா  -  நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

 

ஜிம்   -  நான் கோரிப்பாளையத்தில் இருக்கிறேன்.

 

ராஜா  -  அங்கே போக நிறைய பஸ்கள் இருக்கின்றன.  ஒன்றாம் நம்பர் பஸ்

         அடிக்கடி வரும்.  நீங்கள் அதில் போகலாம்.

 

ஜிம்   -  அந்த பஸ் எங்கே நிற்கும்?

 

ராஜா  -  நீங்கள் மங்கம்மா சத்திரத்தில் நில்லுங்கள்.  அங்கே ஐந்து நிமிஷத்துக்கு

         ஒரு பஸ் வரும்.

 

ஜிம்   -  அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?

 

ராஜா  -  ரொம்ப பக்கத்தில்தான் இருக்கிறது.  அதோ தெரிகிறதே, அதுதான்

         மங்கம்மா சத்திரம்.

 

ஜிம்   -  ஓ!  இவ்வளவு பக்கத்திலே இருக்கிறதா?  ரொம்ப நல்லது.

 

ராஜா  -  உங்களிடம் பணம் இருக்கிறதா?

 

ஜிம்   -  இருபது ரூபாய் இருக்கிறது.  போதுமா?

 

ராஜா  -  ஓ! இதே அதிகம்.  கோரிப்பாளையத்துக்குப் போகப் பத்து

         ரூபாய் போதும்.

 

ஜிம்   -  சரி.  போய்விட்டு வருகிறேன்.

 

ராஜா  -  போய்விட்டு வாருங்கள்.  நாளைக்குப் பார்ப்போம்.