உரையாடல் 9
கல்லூரி இல்லை
ராஜா - வாருங்கள். ரொம்ப நாளாக இந்தப் பக்கம் வரவில்லையே. ஏன்?
ஜிம் - பத்து நாளாக ஊரில் இல்லை. அதனால்தான் வரமுடியவில்லை.
ராஜா - இப்போது உங்களுக்குக் கல்லூரி இல்லையா?
ஜிம் - ஆமாம். இருபதாம் தேதியிலிருந்து இரண்டாம் தேதி வரைக்கும்
கிறிஸ்துமஸ் விடுமுறை.
ராஜா - உங்களுக்கு உங்கள் அப்பாவிடமிருந்து கிறிஸ்துமஸ் பரிசு வருமா?
ஜிம் - ஆமாம். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு பரிசு அனுப்புவார்.
ராஜா - என்ன பரிசு அனுப்புவார்?
ஜிம் - அநேகமாகப் புஸ்தகம்தான் அனுப்புவார்.
ராஜா - அது அமெரிக்காவிலிருந்து இங்கே வர எவ்வளவு நாட்கள் ஆகும்?
ஜிம் - விமானத்தில் ஒரு வாரம் ஆகும். கப்பலில் இரண்டு மாதம் ஆகும்.
ராஜா - அவரால் இங்கே வர முடியாது; உங்களால் அங்கே போக முடியாது.
அதனால் தபாலில்தான் அனுப்ப வேண்டும்.
ஜிம் - நீங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியே எங்கேயும் போகவில்லையா?
ராஜா - இல்லை. இங்கே ஒரு வாரமாக நல்ல மழை. வெளியே போக
முடியவில்லை.
ஜிம் - எங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் சமயம் பனி பெய்யும். இங்கே மழை
பெய்கிறது!
ராஜா - தம்பி வீட்டுக்குள்ளிருந்து என்னைக் கூப்பிடுகிறான். கொஞ்சம் இருங்கள்.
ஜிம் - எனக்கும் வேலை இருக்கிறது. நாளைக்குப் பார்க்கிறேன்.