10. கடைக்குப் போகிறேன்

உரையாடல் 10

                                                                கடைக்குப் போகிறேன்

 

 

ராஜா  -  நான் கடைக்குப் போகிறேன்.  நீங்களும் கூட வருகிறீர்களா?

 

ஜிம்   -  என்ன வாங்கப் போகிறீர்கள்?

 

ராஜா  -  துணி வாங்கப் போகிறேன்.

 

ஜிம்   -  புதுத் துணியா?  என்ன விசேஷம்?

 

ராஜா  -  இந்த மாதம் பதினான்காம் தேதி பொங்கல் வருகிறது, இல்லையா? 

         அதற்காகப் பிள்ளைகளுக்குத் துணி வாங்க வேண்டும்.

 

ஜிம்   -  உங்களுக்குத் துணி வாங்கவில்லையா?

 

ராஜா  -  எனக்கும்தான்.  என் மனைவிக்கும் ஒரு புடவை வாங்க வேண்டும்.

 

ஜிம்   -  எனக்கும் ஒரு புடவை வாங்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை.

         வாருங்கள்.  போவோம்.  உங்கள் உதவியோடு ஒரு நல்ல புடவை

         வாங்குகிறேன்.

 

ராஜா  -  உங்களுக்குப் புடவை எதற்கு?  நீங்கள் கட்டப் போகிறீர்களா?

 

ஜிம்   -  ஐயையோ!  நான் எப்படிப் புடவை கட்ட முடியும்?  அதைப் பெண்கள்

         அல்லவா கட்டுவார்கள்? 

 

ராஜா  -  பிறகு ஏன் புடவை வாங்கப் போகிறீர்கள்?

 

ஜிம்   -  அதை அமெரிக்காவில் என் தங்கைக்கு அனுப்பப் போகிறேன். அவளுக்கு

         உங்கள் ஊர்ப் புடவை என்றால் ரொம்பப் பிடிக்கும்.

 

ராஜா  -  அப்படியா?  சரி, வாருங்கள்.  ஒரு நல்ல புடவை வாங்குவோம்.

 

ஜிம்   -  நாம் எந்தக் கடைக்குப் போகிறோம்?

 

ராஜா  -  கோவிலுக்குக் கிழக்குப் பக்கத்தில் ரொம்ப துணிக் கடைகள்

         இருக்கின்றன.  வாருங்கள்.  நாம் கோவிலைச் சுற்றி அங்கே போவோம்.