11. புடவை விலை அதிகம்

உரையாடல் 11

                                                            புடவை விலை அதிகம்

 

 

ராஜா  -  வாருங்கள், இந்தக் கடைக்குப் போவோம்.  இங்கே நல்ல புடவைகள்

        கிடைக்கும்.  விலையும் மலிவாக இருக்கும்.

 

ஜிம்   -  சரி.  எனக்குப் புடவையைப் பற்றி ஒன்றும் தெரியாது.  இந்த ஊர்க்

         கடைகளைப் பற்றியும் ஒன்றும் தெரியாது.

 

ராஜா  -  உங்களுக்குப் பட்டுப் புடவை வேண்டுமா, நூல் புடவை வேண்டுமா?

 

ஜிம்   -  எனக்குக் காஞ்சீபுரம் பட்டுப் புடவைதான் வேண்டும்.

 

கடைக்காரன்  -  வாருங்கள், சார்.  என்ன வேண்டும்?  பட்டுப் புடவைகள் பார்க்கி

         றீர்களா?  எங்களிடம் நல்ல புடவைகள் இருக்கின்றன.

 

ராஜா  -  ஜிம், உங்களுக்கு என்ன நிறப் புடவை வேண்டும்?

 

ஜிம்   -  எல்லா நிறப் புடவைகளும் அழகாகத்தான் இருக்கின்றன.  உங்களுக்கு

         எது பிடிக்கிறது?

 

ராஜா  -  (கடைக்காரரிடம்)  வேறு புடவைகள் இருக்கிறதா?  காட்டுங்கள்,

         பார்ப்போம்.                          

 

கடை  -  உங்களுக்கு நல்லதாகக் காட்டுகிறேன்.  இதைப் பாருங்கள். 

         ரோஜாப்பூ நிறத்துக்குப் பொருத்தமாகக் கருப்புக் கரை இருக்கிறது.

 

ராஜா  -  இது என்ன விலை?

 

கடை  -  நாலாயிரம் ரூபாய்.

 

ராஜா  -  விலை ரொம்ப அதிகமாக இருக்கிறதே!

 

கடை  -  இல்லை, சார்.  புடவையைப் பாருங்கள்.  ரொம்ப கனமாக இருக்கிறது.

         இது நல்ல ஜரிகை சார்.

 

ராஜா  -  இதை இவர் அமெரிக்காவுக்கு அனுப்பப் போகிறார்.  மூவாயிரத்து ஐநூறு

         ரூபாய்க்குக் கொடுக்கிறீர்களா?

 

கடை  -  ரொம்பவும் குறைவாகக் கேட்கிறீர்கள்!  இருநூறு ரூபாய் குறைவாகக்

         கொடுங்கள்.

 

ராஜா  -  மூவாயிரத்து ஐநூறுக்கு மேல் கொடுக்க முடியாது.  என்ன சொல்கிறீர்கள்?

 

கடை  -  சரி.