12. ஆட்டோ கிடைக்குமா?

உரையாடல் 12

                                                                  ஆட்டோ கிடைக்குமா?

 

 

ராஜா  -  ரொம்ப சாமான்கள் இருக்கின்றன.  இதோடு நாம் வீடு வரைக்கும்

         நடக்க முடியாது.

 

ஜிம்   -  பஸ்ஸில் போகலாமா?

 

ராஜா  -  பஸ் இந்தத் தெரு வழியாக வராது.  வண்டியில்தான் போக வேண்டும்.

 

ஜிம்   -  சைக்கிள் ரிக்ஷாவில் போகலாமா?

 

ராஜா  -  அதில் இவ்வளவு சாமானோடு ஒருத்தர்தான் போக முடியும்.  அதனால்  

         குதிரை வண்டியில் போவோம்.

 

ஜிம்   -  இங்கே குதிரை வண்டி கிடைக்குமா?

 

ராஜா  -  அதோ பாருங்கள்.  அந்த மூலையில் குதிரை வண்டிகள் நிற்கின்றன.

 

ஜிம்   -  ஆமா.  நான் இதுவரை பார்க்கவே இல்லை.  ஒன்றுக்குப் பின்னால்

         ஒன்று வரிசையாகக் கார் வருகிறதே, நாம் எப்படிக் குறுக்கே போக

         முடியும்?

 

ராஜா  -  இந்தத் தெருத் திருப்பத்தில் இப்போது சிவப்பு விளக்கு தெரிகிறது.

         அதனால் கார் இந்தப் பக்கம் வராது.  வாருங்கள், போவோம்.

 

ஜிம்   -  இப்போது எனக்குப் பயம் இல்லை.

 

ராஜா  -  நீங்கள் பின்னால் வாருங்கள்.  வெள்ளைக்காரன் என்றால் வண்டி

         வாடகை அதிகம் கேட்பான்.

 

ஜிம்   -  சரி.

 

ராஜா  -  வண்டிக்காரரே, மேலமாசி வீதிக்குப் போக வேண்டும்.  எவ்வளவு

         கேட்கிறீர்கள்?

 

ஆட்டோக்காரர்  -  அறுபது ரூபாய் கொடுங்கள், சார்.

 

ராஜா  -  என்னப்பா, நிதானமாகக் கேள்.  நான் இந்த ஊர்க்காரன்தான்;

         வெளியூர்க்காரன் இல்லை.

 

ஆட்டோ  -  பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது, சார்.  அறுபது

          ரூபாய்க்குக் குறைவாகக் கட்டாது, சார்.

 

ராஜா  -  ஐம்பது ரூபாய்க்கு வருகிறாயா?  நான் எப்போதும் அவ்வளவுதான்

         கொடுப்பேன்.

 

ஆட்டோ  -  ஐம்பத்தெட்டு ரூபாயாவது கொடுங்கள், சார்.

 

ராஜா  -  உனக்காக ஐம்பத்தைந்து ரூபாய் தருகிறேன்.

 

ஆட்டோ  -  சரி, சார்.  உங்கள் இஷ்டம்.

 

ராஜா  -  ஜிம், வண்டியில் ஏறுங்கள்.  நேரமாயிற்று.