உரையாடல் 13
வண்டியில் போக ஆசை
ராஜா - நீங்கள் இந்த வண்டியிலேயே உங்கள் வீட்டுக்குப் போகிறீர்களா?
ஜிம் - சரி. எனக்கும் இன்னும் கொஞ்ச தூரம் குதிரை வண்டியில் போக
வேண்டும்போல் இருக்கிறது.
ராஜா - பஸ்ஸைவிட இதில் போக நேரம் ஆகும்.
ஜிம் - பரவாயில்லை. எங்கள் நாட்டில் இதைப் போல வண்டி கிடையாது.
அதனால் இதில் போக மிகவும் ஆசையாக இருக்கிறது.
ராஜ - (சிரிக்கிறார்.) உங்கள் நாட்டைப் போல எங்கள் நாட்டில் டாக்சி எல்லா
இடத்திலும் கிடைக்காது. பணமும் அதிகம் ஆகும்.
ஜிம் - மதுரையில் குளிர் இல்லை. அதனால் டாக்சி தேவை இல்லை.
ராஜா - உண்மைதான். அன்னல், ஆட்டோவிலிருந்து புகை அதிகம் வருகிறது.
காற்று சுத்தமாக இல்லை. அதனால் வியாதி வருகிறது.
ஜிம் - எல்லா நாட்டில் காரினால் அப்படி நடக்கிறது. எந்த நாட்டிலாவது
இப்போது சுத்தமான காற்று இருக்கிறதா? சொல்லுங்கள், பார்ப்போம்.
ராஜா - அது உண்மைதான். இந்தியாவிலும் முன்னைவிட இப்போது கார் அதிகமாக
இருக்கிறது. எல்லா இடத்திலும் பெட்ரோல், டீசல் புகை. ஊருக்குள்
நடக்க முடியவில்லை.
ஜிம் - ஒரு நாட்டுடைய முன்னேற்றத்துக்கு இது ஒரு அடையாளம்!
ராஜா - ஆமாம். இந்தியாவும் முன்னேறுகிறது, இல்லையா!
ஆட்டோக்காரர் - சார், எனக்கு நேரம் ஆகிறது. சில்லறை கொடுங்கள். நான்
நான்கு இடத்துக்குப் போக வேண்டும்.
ராஜா - அதற்குள் என்ன’ப்பா அவசரம்? இவர் கோரிப்பாளையம் வரைக்கும்
உன் வண்டியில்தான் வரப் போகிறார்.
ஜிம் - போய்விட்டு வருகிறேன். நாளைக்கு ஒரு முக்கியமான விஷயத்தைப்
பற்றி உங்களிடம் பேச வேண்டும்.
ராஜா - சரி. வாருங்கள், பேசுவோம்.