14. நேரம் ஆயிற்று

உரையாடல் 14

                                                                       நேரம் ஆயிற்று

 

ராஜா  -  நீங்கள் நேற்று எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தீர்கள்?

 

ஜிம்   -  வீட்டுக்குப் போய்ச் சேர எட்டு மணி ஆயிற்று.

 

ராஜா  -  ஏன் அவ்வளவு நேரம் ஆயிற்று?

 

ஜிம்   -  ஆட்டோக்காரன் காக்கிச் சட்டை போடவில்லை.  வழியில் போலீஸ்காரர்

         தடுத்து நிறுத்தி அபராதம் கட்டச் சொன்னார்.

 

ராஜா  -  பிறகு?

 

ஜிம்   -  ஆட்டோக்காரன் ஒரு தடவை மன்னிக்கச் சொல்லிக் கெஞ்சினான். 

         இதில் கொஞ்ச நேரம் போயிற்று.  பிறகு குதிரையால் பாலத்தின்மேல்

         வேகமாக ஏறிப்போக முடியவில்லை.

 

ராஜா  -  இப்போது பஸ்ஸிலேயா வந்தீர்கள்?

 

ஜிம்   -  இல்லை.  சாயங்காலம் பஸ்ஸில் ரொம்பக் கூட்டமாக இருக்கும். 

         பஸ்ஸுக்காகக் காத்து நின்று அதில் இடம் கிடைத்து வர ரொம்ப

         நேரம் ஆகும்.  அதனால் நடந்தே வந்தேன்.

 

ராஜா  -  நான் இன்றைக்குக் காலையில் அந்தப் பக்கம் ஒரு வேலையாக வந்தேன்.

         உங்கள் அறைக்கு வந்து பார்த்தேன்.  உங்களைக் காணோம்.

 

ஜிம்   -  அடடா!  காலையில் பத்து மணி வரைக்கும் நான் பக்கத்து அறையில்

         இருந்தேன்.  ஏதாவது முக்கியமான விஷயமா?

 

ராஜ  -  ஒன்றும் இல்லை.  சும்மா பார்க்க வந்தேன்.

 

ஜிம்   -  நான் உங்களிடம் ஒன்று கேட்க வந்தேன்.  நம் பேச்சு சுவாரஸ்யத்தில்

        அதைக் கேட்க மறந்தே போனேன்.

 

ராஜா  -  அதனால் என்ன?  இப்போது கேளுங்களேன்.